திருவிடைமருதூர் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் இருந்து
ஏரவாஞ்சேரி வழியாக காரைக்கால் செல்லும் வழித்தடத்தில் ஒரு சில பேருந்துகளே இயக்கப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேருந்து படிகட்டுகளில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரைமீதும் ஏறியும்
பயணம் செய்கின்றனர்.
ஏரவாஞ்சேரி மார்க்கத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்கினால் மாணவர்கள் பயன் அடைவார்கள் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.