வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர். நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆய்வுக்கூடத்தில் பெரிய பாம்பு இருப்பதை பார்த்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் ஆய்வுக்கூடத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து சென்றனர். பள்ளியில் பெரிய பாம்பை பார்த்த மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.