தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரம் திருட்டு - காவல் ஆணையர் அலுவலகத்தில், அதிகாரிகள் புகார்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடுபோன விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தேர்வுத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் வீட்டு முகவரி, அவர்கள் படித்த பள்ளி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டு, பல்வேறு இணையதளங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் சென்றுள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தேர்வுத்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தக் கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

தேர்வுத்துறை துணை இயக்குநர் தலைமையில் 3 அதிகாரிகள் நேரில் சென்று புகார் அளித்தனர்.

இது குறித்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை முடிவில் மாணவர்களின் விவரங்களை திருடியது யார் என்பது பற்றியும், எதற்காக திருடப்பட்டது போன்ற பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை