Theni | Jeganath Mishra | TVK | "தேனி மாணவர்கள் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவார்கள்" - MLA ஜெகநாத் மிஸ்ரா நம்பிக்கை #theni #jeganathmishra #tvk #thanthitv தேனி மாணவர்கள் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவார்கள் - MLA ஜெகநாத் மிஸ்ரா தேனியிலிருந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விரைவில் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றி பெறுவார்கள் என, கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில், ‘நம்ம விஜய் நம்ம எம்.எல்.ஏ விளையாட்டு மையம் மற்றும் நம்ம விஜய் கேரம் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற இப்போட்டியை, கம்பம் எம்.எல்.ஏ-வும், தேனி தென்மேற்கு மாவட்ட தவெக செயலாளருமான ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்துப் பரிசுகளும் வழங்கினார். அப்போது பேசிய அவர், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்