#namakkal | #schooleducation
பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு... பரபரப்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது... பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை உணவுத் திட்டத்தின் கீழ் சேமியா கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. உணவு சரியாக வேகவில்லை என்றும், கட்டி கட்டியாக இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், அதைச் சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் மாணவர்களை உடனடியாக மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்துகளும் வழங்கப்பட்டன. சிகிச்சைக்குப் பிறகு மாணவர்கள் வீடு திரும்பிய நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.