தமிழ்நாடு

தானியங்கி நீர் மூழ்கி சாதனம் உருவாக்கி மாணவர்கள் சாதனை...

தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், நீருக்கு அடியில் பல்வேறு ஆய்வுகளுக்கு பயன்படும், நீர் மூழ்கி சாதனம் ஒன்றை உருவாக்கி சாதனை.

தந்தி டிவி

சிங்கப்பூரில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற உள்ள அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான போட்டியில் உலகம் முழுவதும் இருந்து, 40 குழுவினர் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள, இந்த நீர்மூழ்கி இயந்திரமும் தேர்வாகியுள்ளது. இந்த இயந்திரத்திற்கு, மிஸ்டஸ் ஒன் பாய்ண்ட் சீரோ என பெயர் வைத்துள்ளனர்.இதில், கேமரா, மோட்டார்கள், மின்சாரத்தை சேமிக்கும் மின்கலன் உள்ளிட்ட பல சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, நீருக்கு அடியில் மூழ்கி உயிரிழக்கும் மனிதர்களை மீட்பது, அணைகளின் விரிசல், தாவரங்களை பற்றி படிப்பது, நீர் மாசு அடைவதை கண்டறிவது என பல தேவைகளுக்கு பயன்படும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில், பணிகளை நிறைவு செய்து, சிங்கப்பூர் போட்டியில் இந்தியாவை பெருமையடைய செய்வோம் என மாணவர்கள் கூறியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி