தமிழ்நாடு

மாணவி உருவாக்கிய கிராமப்புற வளர்ச்சி அறிக்கை... 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்,விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றமதுரை கிளை ஒத்திவைத்தது.

தந்தி டிவி

மாணவி உருவாக்கிய கிராமப்புற வளர்ச்சி அறிக்கை... 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்,விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றமதுரை கிளை ஒத்திவைத்தது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 10-ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் கௌரி, உருவாக்கிய, கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கை, கிராம ஆட்சியர் பதவி உள்ளிட்ட திட்டங்களை, அரசு செயல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி இருந்தார்.அவர் உருவாக்கிய தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கை நூலை, 5 வகுப்பு 8-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, மாணவி வீடியோ கான்பரன்சிங்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பல தகவல்களை மனுவில் சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜூன் 16 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ