தமிழ்நாடு

செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் கோபம் - 17 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கேந்திராஜா. இவருடைய மகன் ராமர். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். ஆன்லைன் வகுப்புகளுக்கு ராமருக்கு அவருடைய தந்தை செல்போன் வாங்கி தந்துள்ளார். ஆனால் அவரோ செல்போனில் அதிக நேரம் விளையாடிக் கொண்டிருக்கவே, தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமர், எலுமிச்சை தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை மீட்ட உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்