தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொந்தரவு,தனியார் பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு - தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

மாணவிக்கு பாலியல் தொந்தரவு,தனியார் பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு - தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்க அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம், அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையருக்கு முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து கல்வி ஆணையர், தமிழக அரசிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்