தமிழ்நாடு

மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் : நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை...

மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுக பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த 13-ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்துள்ளனர். இந்நிலையில், குரும்பனையை சேர்ந்த சுஜின் என்பவர் மாணவியை ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டு, எதுவும் தெரியாதது போல சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்கவே, இதுதொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், மாணவி தெரிவித்ததை கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுஜினை பிடித்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், தனது நண்பர் ஷாம் பிண்டோவுடன், மாணவியை வேளாங்கண்ணிக்கு அனுப்பி வைத்ததையும், பின்னர் அங்கு சென்று மிரட்டி கூட்டுப் பலாத்காரம் செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அழைத்து சென்றதாகவும், பின்னர் பணம் இல்லாத நிலையில் ஊருக்கு அழைத்து வந்து விட்டதாகவும் விசாரணையில் சுஜின் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் மறைந்திருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த ஷாம் பிண்டோவை கைது செய்த போலீசார், சுஜினிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு