தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை -மருத்துவர் கைது

கரூரில் நிர்வாகியின் மகளை தனியறைக்கு வரவழைத்து அத்துமீறிய மருத்துவர் ரஜினிகாந்த், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

கரூரில் நிர்வாகியின் மகளை தனியறைக்கு வரவழைத்து அத்துமீறிய மருத்துவர் ரஜினிகாந்த், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள பிரபல எலும்பு முறிவு மருத்துமனையில், பெண் ஒருவர் பணியாற்றினார். அவருக்கு நிர்வாகத்துடன் மன வருத்தம் ஏற்பட்டு, பணிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் நிர்வாகியின் மகளான சிறுமியை, மருத்துவமனைக்கு வரவழைத்த மருத்துவர் ரஜினிகாந்த், தனியறையில் வைத்து அத்துமீறியதாக புகாரளிக்கப்பட்டது. இதன்பேரில், மருத்துவமனை மேலாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். தகவலறிந்த மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவானார். அவரை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்த தனிப்படை போலீசார், வேலாயுதம்பாளையத்தில் வைத்து கைது செய்தனர். நீதிபதி நசீமாபானு முன் ஆஜர்படுத்திய நிலையில்,15 நாள் நீதிமன்ற காவலில், கரூர் கிளை சிறையில் மருத்துவர் ரஜினிகாந்த் போக்சோ வழக்கில் அடைக்கப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்