ஆனால் வறுமை காரணமாக அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த நிலையில், தமிழ் மீது கொண்ட பற்றால் சந்தோஷ்குமார் சாக்பீஸில் 1330 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் 1463 சாக்பீஸை பயன்படுத்தி உள்ளார். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்புகளை வண்ண சாக்பீஸிலும் குறள்களை வெள்ளை சாக்பீஸிலும் சந்தோஷ்குமார் எழுதியுள்ளார். முன்பக்கம் குறளின் முதல் வரியும் பின்புறம் அடுத்த வரியும் வரும்படி அவர் எழுதியுள்ளார். இதற்கு ஒரு நாளைக்கு 20 மணிநேரம் செலவிட்டதாகவும், 8 நாட்களில் இதை முடித்ததாகவும் மாணவர் சந்தோஷ் தெரிவித்தார்.
அவரது முயற்சியை பாராட்டி சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சதீஷ்குமாரை பலர் பாராட்டினர் வருகின்றனர்.