காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி விடுதியில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அருகே ஏனத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் திருப்பதியை சேர்ந்த மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவியின் விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து பார்த்த நிலையில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி முன் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.