பெங்களூருவில் நைட்டியால் உடலை முழுவதும் மறைத்து இரவு நேரத்தில் செருப்புக்களை குறிவைத்து திருடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக நைட்டியை மாட்டிக்கொண்டு வலம் வரும் நபர், வீட்டிற்கு வெளியே கழற்றி விடப்படும் செருப்புகளை சாக்குமூட்டையில் அள்ளிப்போட்டு திருடி செல்லும் வீடியோவை அனில் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்