சிறுவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள் - லஞ்ச் பேக்கை தூக்கி வீசி அலறி ஓடிய பதைபதைக்கும் காட்சி #chennai #dog #thanthitv சென்னை ஆலந்தூரில் தெருநாய்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனை விரட்டிச் சென்று கடிக்க முயன்றதுடன், வாகன ஓட்டிகளையும் துரத்திச் சென்றன. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.