தமிழ்நாடு

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...?

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் , அது மண்டலமாகவும், தொடர்ந்து புயல் சின்னமாகவும் உருவாக வாய்ப்பு உள்ளது என நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த‌து. இந்த நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரமணமாக வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்