தமிழ்நாடு

Elephant | "வண்டிய நிறுத்து.. வண்டிய நிறுத்து.." - பேருந்தை வழிமறித்து குறுக்கே நின்ற யானை

"வண்டிய நிறுத்து.. வண்டிய நிறுத்து.." - பேருந்தை வழிமறித்து குறுக்கே நின்ற யானை

thanthitv

"வண்டிய நிறுத்து..வண்டிய நிறுத்து.." - பேருந்தை வழிமறித்து அரை மணி நேரம் குறுக்கே நின்ற யானை #ooty #elephant #thanthitv உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் அரசு பேருந்தை ஒற்றைக் காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்காரா பகுதியில் இருந்து பயணிகளுடன் உதகை நோக்கி வந்த அரசு பேருந்து, 16-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது சாலையின் குறுக்கே யானை நின்றது. இதனால் ஓட்டுநர் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் நின்ற யானை, பின்னர் பேருந்தின் முன்பகுதிக்கு வந்து தும்பிக்கையால் தொட்டுப் பார்த்தது. இதனால் ஓட்டுநரும் பயணிகளும் அச்சமடைந்தனர். மேலும், இருபுறமும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றதைத் தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதுமின்றி பேருந்து உதகை நோக்கிப் புறப்பட்டது.

Akwan Cyclone Update| அசுரன் புயல் எபெக்ட்.. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வந்தது

Tanishq Theft | தனிஷ்க் கொள்ளை.. அத்தனை நகைகளும் டேபிளில்.. "ஜூவல்லரி கடையே ஓபன் பண்ணலாம் போலயே"

வீட்டில் கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி - கண்காணித்து இருவரையும் வெட்டிக் கொன்ற கணவன்

Chennai | நூல் கொள்முதல் முறைகேடு வழக்கு.. அண்ணா நூற்றாண்டு நூலக ஊழியர்களுக்கு பறந்த சம்மன்

Delhi | Buildingcollapse தலைநகரில் சுக்குநூறான கட்டடம் 3 மாத குழந்தைக்கு நேர்ந்த கோரம் ?