தமிழ்நாடு

அமைச்சர்கள் காலில் விழுந்த மூதாட்டி - பணம் கொடுத்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள்

மூதாட்டி ஒருவர் அமைச்சர்கள் காலில் விழுந்து கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கோரிய நெகிழ்ச்சியான சம்பவம் சத்தியமங்கலத்தில் அரங்கேறியுள்ளது

தந்தி டிவி

மூதாட்டி ஒருவர் அமைச்சர்கள் காலில் விழுந்து கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கோரிய நெகிழ்ச்சியான சம்பவம் சத்தியமங்கலத்தில் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள காராச்சிக்கொரை வனப்பகுதியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைத்திட பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை தந்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ண‌ன் ஆகியோர் கால்களில், திடீரென ஒரு மூதாட்டி விழுந்து, கிராமத்திற்கு அடிப்படை தேவைகள் வழங்குமாறு கோரினார். விரைவில் செய்து முடிப்பதாக உறுதி அளித்த அமைச்சர்கள், மூதாட்டிக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி