தமிழ்நாடு

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் கோரிக்கை விதிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்