தமிழ்நாடு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ எஸ்.பி. சரவணன் தலைமையிலான குழுவினர் துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த சுமார் 40 பேரிடம் வாக்குமூலத்தை அவர்கள் பெற்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 15 துப்பாக்கிகள் யாருடைய உத்தரவில் வழங்கப்பட்டது, கையெழுத்திட்டு வாங்கிய காவல் துறை அதிகாரிகள் யார் என்பது குறித்தும், யாருடைய அனுமதியின் பேரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது என்பது தொடர்பான ஆவணங்களை தமிழக சிபிசிஐடி அதிகாரிகளிடம் இருந்து சிபிஐ பெற்றுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின்போது அதனை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ