மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் கோவிலில் இரண்டு தினங்களுக்கு முன்னர் திருட்டு சம்பவம் நடந்தது. கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் குத்துவிளக்கு, சங்கு உள்ளிட்ட பித்தளை பொருட்களை திருடிச் சென்றார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திலகர் திடல் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். சிலை திருட்டில் ஈடுபட்ட செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரையும் , சுவாமி சிலைகள் மற்றும் பொருட்களை விலைக்கு வாங்கிய மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முஹம்மது முஸ்தா மற்றும் செபஸ்தியான் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஐம்பொன் சிலைகள், குத்துவிளக்கு, சங்கு உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.