தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிம்ம சொப்பமான திகழ்ந்த காளைக்கு சிலை வைத்து மக்கள் வழிபாடு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பமான திகழ்ந்த காளைக்கு சிலை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

தந்தி டிவி

ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரையில் காளைகளை வளர்ப்பதிலும், அதனை போட்டிக்கு தயார் செய்வதிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அலங்காநல்லூர் அருகே உள்ள பொந்துகம்பட்டி மக்கள், உயிரிழந்த காளையை தெய்வமாக வழிபடுகின்றனர்.

இந்த கிராமத்தில் பொதுமக்களால் வளர்க்கப்பட்ட முத்தாலம்மன் கோவில் காளை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு ஜல்லிகட்டு போட்டிகளில் பல பரிசுகளை வென்று ஊரின் பெருமையை நிலைநாட்டியது. ஆனால் கடந்த 1994ல் வயது முதிர்வு காரணமாக காளை உயிரிழந்ததையடுத்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

பிரியமாக வளர்க்கப்பட்ட காளையை தெய்வமாக வழிபட வேண்டும் என விரும்பிய மக்கள், ஊரின் நடுவே அதனை அடக்கம் செய்து அதன் மேல் காளை மாட்டின் சிலையை நிறுவினர். தற்போது அதற்கு மணிமண்டபம் கட்டி ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இறந்த காளையின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே1 ம் தேதி கிராம மக்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.காளையின் மீது கொண்ட பிரியத்தால் அதை தெய்வமாகவே கருதி வழிபடும் இந்த ஊர் மக்களின் பாசம் இங்கே வருபவர்களை நெகழச் செய்கிறது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்