தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாஹு, உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறினார். தேர்தலையொட்டி, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலில் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்திருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் இறுதி வாக்காளர்கள் பட்டியல் தயாராகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சத்ய பிரதா சாஹு கூறினார்.