தமிழ்நாடு

நட்சத்திர விடுதியில் பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய காதலன்

போதைப் பொருள் கொடுத்து தன் வாழ்க்கையை சீரழித்த காதலன், நட்சத்திர விடுதியில் தன்னை தாக்கியதாக கூறி இளம்பெண் ஒருவர் சென்னையில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

தந்தி டிவி

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா. இவர் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் ஐஸ்க்ரீம் கடை நடத்தி வந்த பெரோஸ்கானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் பெரோஸ்கான் தன் காதலி கவுசல்யாவை அடிக்கடி நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் பெரோஸ்கானின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு கவுசல்யா விலகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன் தோழிகளுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு கவுசல்யா சென்றுள்ளார். அங்கு வந்த பெரோஸ்கான், கவுசல்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் செல்போனையும் பெரோஸ்கான் உடைத்துள்ளார்.

தன் காதலன் தனக்கு போதைப் பொருள் கொடுத்து தன் வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும் கவுசல்யா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

மேலும் சென்னையில் பெரோஸ்கான் தொடர்ந்து போதைப் பொருள்களை விநியோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கவுசல்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்