நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 27 அமாவாசைகளுக்கு பின் திமுக ஆட்சி இருக்காது என குறிப்பிட்ட நிலையில், அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்துதான், மக்கள் வாக்களித்து, இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.