* நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, நேரு உள்ளிட்டோர் சென்றனர்.
* அங்கு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவர்கள் மரியாதை செலுத்தினர்.
* மேலும் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகம் மற்றும் முரசொலி மாறன் ஆகியோரின் சிலைகளுக்கும் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.