தமிழ்நாடு

"பண்பாட்டுப் பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை" - திமுக தலைவர் ஸ்டாலின்

பண்பாட்டுப் பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தந்தி டிவி

தொல்தமிழர் பெருமையைப் பறைசாற்றும் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், கீழடியில் நான்காம் கட்ட ஆய்வு தொடர்பாக தொல்லியல்துறை வெளியிட்ட அறிக்கைக்கு உடனடியாக பாராட்டு தெரிவித்ததாக கூறியுள்ளார். கீழடியில் இதற்கு முன்பு மத்திய தொல்லியல் துறை நடத்தியுள்ள 3 கட்ட ஆய்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கீழடி மட்டுமின்றி, ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வு முடிவுகளையும் தொல்லியல் துறை வெளியிடவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கீழடியில் மட்டுமல்ல, தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும் செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தள்ளார். அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் நமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்