தமிழ்நாடு

"மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்" - சட்டப் பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்

மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தந்தி டிவி

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் , இந்த விவகாரத்தில் உரிய தடையாணை பெறுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், மேகதாதுவில் தடுப்பணை கட்ட கூடாது என்பதுதான் உங்களுடைய நிலைப்பாடாகவும் இருக்கிறது, எங்களுடைய நிலைப்பாடாகவும் இருக்கிறது என்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்