தமிழ்நாடு

பள்ளிகளை திறப்பது நியாயமா? - ஸ்டாலின் கேள்வி

நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், பள்ளிகள் திறக்கப்படும் போது, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், உள்ளிட்ட நடைமுறைகளைப் எந்த அளவிற்குச் செயல்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அவசர கதியில் முடிவு எடுக்காமல், பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் நவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற அறிவிப்பை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பை வெளியிட்டு மக்களின் பதற்றத்தை போக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?