ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு முன்மொழிந்த கடன்பெறும் இரண்டு வழிகளை ஏற்று கொள்ள மறுத்ததற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
* மாநிலங்களுக்கு நிதியை வழங்க வேண்டியது, மத்திய அரசின் தார்மீக மற்றும் சட்டரீதியான கடமையாக இருக்கும் போது, அவ்வாறு வழங்கப்படாத நிதிக்கு பதிலாக கடன் வாங்கி கொள்ளுமாறு மத்திய அரசு முன்மொழிவது, மாநிலங்களுக்கான உரிமையை பரிதாபத்திற்கு உள்ளாக்குவது ஆகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
* 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் மட்டும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக் கணக்கில் இருந்து 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை, சட்டத்திற்குப் புறம்பாக, இந்தியத் தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டி காட்டியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
* ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் திரும்ப பெற இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காக மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் போராட்டம் வீண்போகாது என்றும் அக்கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.