எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது தமிழ் தொண்டு என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல வானம் வசப்பட்ட பிரபஞ்சனுக்கு பூமி வசப்படாததால், காலமானார் என்றும், அவர் எழுத்துக்கள் எப்போதும் நம்முடன் என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.