தமிழ்நாடு

கீழே விழுந்து அடி பட்ட சிறுவன்.. தலையில் `Pin' அடித்து தென்காசியை அதிர வைத்த டாக்டர்

தந்தி டிவி

பண்பொழியை சேர்ந்த பரமசிவன் - காளியம்மாளின் மகன் கவுசிக், 5ம் வகுப்பு பயின்று வருகிறான். சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் கவுசிக் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் தலைப்பகுதியில் சுத்தம் செய்யாமல், பின் அடித்து தையல் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் வலியில் துடித்த சிறுவனை அவரது தாயார் காளியம்மாள், தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காமல் அவசர கதியில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக காளியம்மாள் தெரிவித்தார். இதுதொடர்பாக தென்காசி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் நடத்திய விசாரணையில், அந்த தனியார் மருத்துவமனை முறையாக படிக்காத நபரால் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி மருத்துவர் அமிர்தலாலை கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்