தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்துள்ள மலை அடிவாரத்தில் பழங்கால ஓடுகள், கற்கள் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுகின்றன. இது குறித்து தகவலறிந்த கல்லூரி மாணவ-மாணவிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழங்கால கற்கள் உள்ளிட்டவற்றை கண்டெடுத்தனர்.

அப்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டிய போது, பழங்கால ஓடுகள் கிடைத்ததாகவும் , அவை பழங்கால முதுமக்கள் தாழிகளின் ஓடுகளாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியை பாதுகாத்து தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்