திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாம்பழச்சாலை அருகில் உள்ள வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக வீதி உலா வந்தார். தைத்தேர் திருவிழா கடந்த ஜனவரி 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.