தமிழ்நாடு

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய குடும்பத்தினர் : தந்தை, 2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். நெமிலி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமது வீட்டு கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக, 2 மகன்களுடன் உள்ளே இறங்கினார். பாதுகாப்பாற்ற முறையில் தொட்டிக்குள் இறங்கிய அவர்கள், விஷவாயு தாக்கியதில் உள்ளேயே மயங்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக வடமாநில இளைஞர் சுரதாபாய், லட்சுமிகாந்தன், பரமசிவம் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால், விஷ வாயு தாக்கியதில் 6 பேரும் உள்ளேயே உயிரிழந்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு