தமிழ்நாடு

மீனவர்களிடம் வலை,ஜி.பி.எஸ் கருவிகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர்.

தந்தி டிவி

நேற்று, நாகை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விழுந்தமாவடியைச் சேர்ந்த மீனவர்களை, கடுமையாக தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறித்துச் சென்றனர்.

இந்தநிலையில், இன்று மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகை செருதூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், கந்தவேல், முருகானந்தம் ஆகிய 3 பேரும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தலை, கால், கை உள்ளிட்டவற்றில் வெட்டு வாங்கிய தமிழ்ச்செல்வன், ரத்தவெள்ளத்தில் படகிலேயே மயங்கி விழுந்தார். படகில் இருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை, கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள், மூன்று பேரும் இன்று காலையில் கரை திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’