நடுக்கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை பறித்துக்கொண்டு, கத்தியை காட்டி மிரட்டி தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் துரத்தியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்ட நாகை பெருமாள்பேட்டை மீனவர்கள், கோடியக்கரை அருகே மீன்பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் 5 பேர், கத்தியை காட்டி மிரட்டியதோடு, 3 லட்சம் மதிப்புள்ள சுமார் 300 கிலோ எடையுள்ள வலைகளை பறித்துகொண்டுள்ளனர். வலைகளை பறிகொடுத்து வீடு திரும்பிய மீனவர்களின் நிலை, தமிழக மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.