தமிழ்நாடு

கடலில் தத்தளித்த மீனவர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை

கச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தந்தி டிவி
கச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை கப்பல் குழுவினரால், கடலில் தத்தளித்த படகு ஒன்று தத்தளித்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த படகில் உள்ளவர்களுக்கு உடனடியாக தொழில் நுட்ப ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர். மேலும் சோர்வான நிலையில் இருந்த மீனவர்களுக்கு உணவு மற்றும் பானங்களையும் இலங்கை கடற்படையினர் அளித்துள்ளனர். படகில் இருந்த 4 மீனவர்களும் 37 முதல் 60 வயது வரையிலானவர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்த பின்னர் அவர்களை, மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை