தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் : நடுக்கடலில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல்

கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சிங்கள மீனவர்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, இன்று அதிகாலை கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 6 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அதிவேக படகில் அங்கு வந்த சிங்கள மீனவர்கள் அரிவாள் மற்றும் கட்டைகளை கொண்டு, படகின் உரிமையாளர் கண்ணன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கண்ணனின் கை,கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. படகில் இருந்து 4 லட்சம் மதிப்பிலான வலை, மீன்கள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை சிங்கள மீனவர்கள் பறிமுதல் செய்தனர். காயம் அடைந்த மீனவர்கள் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் மட்டும் 3-வது முறையாக சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதால், தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை