தமிழ்நாடு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி : சென்னையில் தங்கியுள்ள 3 பேரிடம் விசாரணை

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஒருவர், தாக்குதல் நடத்துவதற்கு முன் சென்னை வந்து சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் . இந்த சம்பவத்தை அடுத்து இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உஷார்ப் படுத்தப்பட்டது. இந்நிலையில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், சென்னை மண்ணடியில் உள்ள ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில், இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து சென்றிருப்பது தெரியவந்தது. பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் தங்கி இருப்பதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியான ஹாசிமினுடன் தற்பொழுது பூந்தமல்லியில் விசாரிக்கப்பட்டு வரும் 3 பேர் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்