உடற்கட்டு போட்டிகளில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள விளையாட்டு வீரர் சோ.பாஸ்கரனுக்கு தமிழக அரசு சார்பாக 25 லட்ச ரூபாய் ஊக்க தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, பாஸ்கரனுக்கு ஊக்க தொகை வழங்கியுள்ள அரசு, அவரது பயிற்றுநரான அரசு அவர்களுக்கு மூன்று லட்சத்து 75 ஆயிரம் வழங்கிட ஆணை வெளியிட்டுள்ளது.