தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, வருகிற 20 ம் தேதி முதல், தெற்கு ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இதன்படி, தாம்பரம் - நெல்லை இடையே, 20, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில், சுவிதா சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படும்.தீபாவளி முடிந்து, ஊர் திரும்பும் வகையில், நாகர்கோவில் - தாம்பரம் இடையே, வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் ரெயில் இயக்கப்படும். தாம்பரம் - திருச்சி இடையே வருகிற 30 ம் தேதி, சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.