தமிழ்நாடு

"சிறப்பு ரயிலில் அனுப்பப்பட்ட பார்சலில் வந்த துப்பாக்கி" - 30 ஆண்டுகள் பழமையான துப்பாக்கியால் பரபரப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து நெல்லை வந்த சிறப்பு ரயிலில் அனுப்பப்பட்ட பார்சலில் துப்பாக்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அழைத்து வரப்பட்டனர். 2 தினங்களுக்கு முன்பு நெல்லை சந்திப்புக்கு வந்த அந்த ரயிலில் ஏராளமான பார்சல்களுக்கும் கொண்டு வரப்பட்டது. அதில் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட பார்சலில் துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பழைய கலைபொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தென்காசி பகுதியை சேர்ந்த பாலு என்பவருக்கு அந்த துப்பாக்கி அனுப்பப்பட்டுள்ளதாகவும், 30 ஆண்டுகள் பழமையான அந்த துப்பாக்கியை கலைபொருளாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அதை பாலுவிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்