தமிழ்நாடு

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார் : நெல்லை ஆட்சியர், தேர்வு வாரியத்துக்கு நோட்டீஸ்

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார் தொடர்பாக நெல்லை ஆட்சியர், தேர்வு வாரியத்துக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
நெல்லையைச் சேர்ந்த முத்து என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், ஓவிய ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றிருந்தும், தனக்கு பணி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகார் தொடர்பாக 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான பதிலை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த பதிலும் வரவில்லை எனில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்