தமிழ்நாடு

குரு பெயர்ச்சி : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

குருப்பெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

* துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியானார். கும்பகோணம் அருகே உள்ள குருஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.

* நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை முடிந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.. பின்னர் மலர் அலங்காரத்துடன் குருபகவான் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், இரவு பத்து - ஐந்து மணியளவில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானார்.

* இதையொட்டி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபகவானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி