மயிலாடுதுறை மாவட்டம் சரஸ்வதி விளாகம் கிராமத்தில் சரஸ்வதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. கோவிலில் குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது. அப்போது குழந்தைகள் அரிசி மணிகளில் எழுத, அவர்களது நாவில் அர்ச்சகர் தேன் கொண்டு தமிழின் முதல் எழுத்தான 'அ' வை எழுதினார். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.