தமிழ்நாடு

Special Bus | அடுத்தடுத்து TN முழுவதும் தயாரான சிறப்பு பேருந்துகள்.. புக்கான 27,000 சீட்

Special Bus | அடுத்தடுத்து TN முழுவதும் தயாரான சிறப்பு பேருந்துகள்.. புக்கான 27,000 சீட்

thanthitv

மே தினம், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வரும் 30ம் தேதி 475 பேருந்துகளும், மே 1, 2 ஆகிய தேதிகளில் 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு வரும் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை 160 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து தலா 14 பேருந்துகளும், ஈரோடு மற்றும் கோவையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.. மேலும் ஞாயிற்றுக்கிழமை (மே 3ம் தேதி) மீண்டும் ஊர் திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் 615 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 27,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் www.tnstc.in இணையதளம் மற்றும் Mobile செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்