இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கேரள முதலமைச்சரின் செயலாளர், தமிழக செயலாளரிடம், ரயில் மூலம் 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா என கேட்டதாக கூறியுள்ளார். சென்னையின் ஒருநாள் குறைந்தபட்ச தேவை 525 லட்சம் லிட்டர் தண்ணீர் என்றும், தேவை ஏற்பட்டால், கேரள அரசின் உதவியை நாடுவோம் என, முதலமைச்சர் கூறியதாக வேலுமணி கருத்து பதிவிட்டுள்ளார்.நாளை அதாவது வெள்ளிக்கிழமையன்று, நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, முதலமைச்சர் பழனிசாமி உரிய முடிவை அறிவிப்பார்கள் என்றும் வேலுமணி கூறியுள்ளார்.கேரள அரசு வழங்கும் தண்ணீரை, மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்றும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.