டெல்லியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தனித்தனியாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுமார் மூன்றாயிரத்து 558 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.