தமிழ்நாடு

புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பி., கவலைக்கிடம் - கொரோனாவில் இருந்து மீண்டு வர திரை உலகம் பிரார்த்தனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட, புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தந்தி டிவி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட, புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 74 வயதான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கம்பீர குரலால், தலைமுறைகள் தாண்டி அனைவராலும் ரசிக்கப்படும் கலைஞர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். கடந்த 5ம் தேதி, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், கடந்த 13ம் தேதி எஸ்.பி.பி. உடல்நிலை கலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியிலும், திரை உலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்

தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே , தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், படுக்கையில் இருந்தபடி கையை உயர்த்தி காட்டும் புகைப்படம் இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்